கிளிநொச்சி – பூநகரி சங்குபிட்டி வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் ஸ்தலத்திலயே பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த சம்பவம் நேற்று (29) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றுமொரு வாகனத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.இதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

