யாழ்ப்பாணம் சா்வதேச விமான நிலையத்தில் பயங்கரமான பொருட்களின் வகைப்பாட்டுக்குள் தமிழகத்திலிருந்து கொண்டுவரப்படும் அல்வா, மல்லிகைப்பூ மற்றும் சுவிற் வகைகள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக கடும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் பரிசோதனைக் கருவி இன்மை காரணமாக பலவகையான பொருட்கள் எடுத்துச் செல்லும் அனுமதிகள் மறுக்கப்படுகின்றது.
பரிசோதனையின் போது யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக பயணிக்கும் பயணி தனது உடமைகளை கை மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அவலம் காணப்படுகின்றது.
இதன் காரணமாக இந்தியாவில் இருந்து இலங்கை வரும் பயணிகள் உறவுகளிற்காக எந்தவகையான பழங்கள் , பூ வகைகளும் எடுத்து வரமுடியவில்லை என பயணிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக வரும் பயணிகள் இதே வகையான பொருட்களை கொண்டுவரும் நிலையில் யாழ் சா்வதேச விமான நிலையம் ஊடாக அவற்றை கொண்டுவர தடை விதிக்கப்படுகின்றது.
அண்மையில் திருமண நிகழ்வுக்காக25 ஆயிரம் ரூபாவிற்கு பூ வகைகளும் , மேலும் 50 ஆயிரம் ரூபாவிற்கு உணவுகள் , பழங்கள் போன்றவற்றை இருவா் கொண்டு வந்த நிலையில் கொழும்பின் ஊடாக யாழ்.வந்தவாின் பொருட்கள் வந்து சேர்ந்தபோதும் யாழ்ப்பாணம் விமான நிலையம் ஊடாக வந்த பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
இது தொடர்பில் தெரிவித்த விமான நிலைய அதிகாரிகள், குறித்த வகை பொருட்களை எடுத்து வருவதற்கு தற்போது விவசாய அமைச்சு தடை செய்துள்ளதாக கூறியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

