காப்பான் படத்தை அடுத்து தனது மனைவி சாயிஷாவுடன் இணைந்து ‛டெடி’ என்ற படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. அதையடுத்து பா.ரஞ்சித் இயக்கும் சல்பேட்டா படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார். வடசென்னை குத்துச் சண்டை வீரர்களைப்பற்றிய கதையில் உருவாகும் இப்படம் ஆர்யாவின் 30ஆவது படமாகும்.
ஆர்யாவுக்கு ஜோடியாக துஷாரா நடிக்கிறார். ‛மெட்ராஸ்’ கலையரசனும் முக்கிய ரோலில் நடிக்கிறார். இந்த படத்திற்காக சில மாதங்களாகவே கடின உடற்பயிற்சி செய்து வந்த ஆர்யா, தற்போது பாடிபில்டராக பக்காவாக மாறி விட்டார். அதையடுத்து தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை டுவிட்டரில் அவர் வெளியிட்டிருக்கிறார்.
அதோடு, வலிமையாக இருப்பது மட்டும்தான் உங்களுக்குள்ள ஒரே வாய்ப்பு. நீங்கள் எவ்வளவு வலிமை கொண்டவர்கள் என்பது உங்களுக்கு ஒருபோதும் தெரியாது என்றும் பதிவிட்டுள்ளார் ஆர்யா. மேலும், இந்த படம் குறித்த கூடுதல் தகவல் இன்று(பிப்., 20) மாலை 5 மணிக்கு வெளியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

