Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

புதிய கூட்டணிக்கான ஆவணங்கள் சமர்பிப்பு

February 17, 2020
in News, Politics, World
0

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தலைவராகவும் முன்னாள் ஜனாதிபதி தவிசாளரும் என பெயரிடப்பட்டு புதிய கூட்டணிக்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் இணைந்து உருவாக்கியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணியையே பதிவு செய்வதற்கான ஆவணங்கள் சமர்பிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆவணங்கள் இன்று  சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவினால் தேர்தல் ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டன.

சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களின்படி, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கூட்டணிக்கு தலைமை தாங்க உள்ளார், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கட்சியின் தவிசாளராக பெயரிடப்பட்டுள்ளார்.

மேலும் இக்கூட்டணியின் செயலாளராக முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும், தேசிய அமைப்பாளர்களாக விமல் வீரவன்ச மற்றும் தயாசிறி ஜயசேகரவும் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த கூட்டணி எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மொட்டு சின்னத்திலேயே போட்டியிடும் என்றும் சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அறிவித்துள்ளார்.

Previous Post

மொட்டுக் கட்சியின் வாலில் தொங்கி போட்டியிடும் அளவுக்கு மைத்திரியின் நிலமை

Next Post

பாடசாலை மாணவர்கள் 15 பேர் வைத்திய சாலையில்!

Next Post

பாடசாலை மாணவர்கள் 15 பேர் வைத்திய சாலையில்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures