Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கோட்டாபயவின் தீர்மானம் தவறானது – சம்பிக்க

February 6, 2020
in News, Politics, World
0
கோட்டாபயவின் தீர்மானம் தவறானது – சம்பிக்க

“நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் கோட்டாபய அரசு பொருளாதார ரீதியில் தற்போது முன்னெடுத்துள்ள தீர்மானங்கள் முற்றிலும் தவறானதாகும்.

இந்த நிலைமை தொடர்ந்தால் அரசு அடிப்படைச் செலவுகள் அனைத்தையும் குறைத்துக்கொள்ள நேரிடும்” என ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். தொடர்ந்தும் பேசிய அவர்,

“மூன்றிலிரண்டு பெரும்பான்மையைப் பெறும் நோக்கில் பொருளாதார ரீதியில் கோட்டாபய அரசு எடுத்த தீர்மானங்களினால் இன்று நுகர்வோர், வியாபாரிகள் மற்றும் நடுத்தர மக்கள் பாரிய நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளார்கள்.

சுதந்திரம் பெற்றதன் பின்னர் வட்டி மற்றும் சம்பளம் செலுத்திய பின்னர் தேசிய வருமானம் இல்லாமல்போன ஒரே அரசாக நடப்பு அரசைக் குறிப்பிடலாம்.

நாட்டின் தேசிய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது நிபுணர்களின் குழு (வியத்மக) ஆகியோரது பிரதான பேசுபொருளாகக் காணப்படுகின்றது.

நல்லாட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்ததாகக் குற்றஞ்சாட்டும் வியத்மக உறுப்பினர்கள் 2013 மற்றும் 2014ம் ஆண்டுகளில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் தேசிய பொருளாதாரத்தின் நிலைமை எவ்வாறு காணப்பட்டது என்பது தொடர்பில் கருத்துரைப்பதில்லை.

10 வருட கால ஆட்சியில் தேசிய பொருளாதாரம் எதிர்கொண்ட சவால்கள் மற்றும் நெருக்கடிகளுக்கு 2015ம் ஆண்டு நல்லாட்சி அரசு பொறுப்புக்கூற வேண்டிய நிலை தோற்றம் பெற்றது.

தேசிய பொருளாதாரம் தொடர்பான கொள்கைகளைப் பாரம்பரிய அடிப்படையிலே இன்றும் நாம் பின்பற்றுகின்றோம். நல்லாட்சி அரசும், நடப்பு அரசும் பழைய பொருளாதார கொள்கைகளுக்கு அமையவே செயற்பட்டன, செயற்படுகின்றன.

புதிய பொருளாதாரக் கொள்கை முறைமை தொடர்பில் கவனம் செலுத்துவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவில்லை. அதற்குப் பல்வேறுபட்ட அரசியல் மற்றும் பொதுக்காரணிகள் செல்வாக்குச் செலுத்துகின்றன” என்றார்.

Previous Post

மூத்தோன் படத்திற்கு தெற்காசிய திரைப்பட விருது

Next Post

இணக்கப்பாட்டை மீறினால் மீண்டும் பேச்சுவார்த்தை!

Next Post
இணக்கப்பாட்டை மீறினால் மீண்டும் பேச்சுவார்த்தை!

இணக்கப்பாட்டை மீறினால் மீண்டும் பேச்சுவார்த்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures