Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார வல்லுநர் மனோ தித்தவெல காலமானார்

February 5, 2020
in News, Politics, World
0

பொருளாதார வல்லுநரும் அரசதுறைச் சார்ந்த உயரதிகாரியுமான மனோ தித்தவெல நேற்றுமுன்தினம் (3) தனது 59ஆவது வயதில் அவுஸ்திரேலியா, மெல்பர்ன் நகரில் காலமானார்.

நிதியமைச்சின் முன்னாள் சிரேஷ்ட ஆலோசகராகவும் இலங்கை காப்புறுதி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவராகவும் இவர் பணியாற்றினார். அத்துடன் அவர் கடந்த அரசாங்கத்தில் நல்லிணக்க பொறிமுறைக்கான இணைப்புச் செயலாளராகவும் செயற்பட்டு வந்துள்ளார்.

இவர் 2003 ஆகஸ்ட் தொடக்கம் 2005 நவம்பருக்கிடைப்பட்ட காலப்பகுதியில் பொருளியல் விவகாரங்களுக்கான சிரேஷ்ட ஜனாதிபதி ஆலோசகராகவும் ஜனாதிபதி அலுவலகத்தின் சிரேஷ்ட பணிப்பாளர் நாயகமாகவும் கடமையாற்றியுள்ளார்.

றோயல் கல்லூரியின் பழைய மாணவரான இவர் சில காலம் நோய்வாய்பட்டிருந்தார். மெல்பர்னிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 08 ஆம் திகதி சனிக்கிழமை மெல்பர்னில் நடைபெறவிருப்பதாகவே அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

Previous Post

70 ஆயிரம் டொலர்களை மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றபோது மடக்கிப் பிடிப்பு

Next Post

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Next Post

மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures