அச்சுவேலி வல்லைப் பகுதியில் உள்ள வீடொன்றில் உள்ள பாதுகாப்பற்ற கிணற்றில் விழுந்து 5 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீரென காணாமல் போயுள்ளார் . வீட்டில் இருந்தவர்கள் சிறுமியை தேடி பார்த்தபோது, பாதுகாப்பற்ற கிணற்றில் சடலமாக காணப்பட்டுள்ளார்.
சிறுமியை மீட்ட உறவினர்கள், அச்சுவேலி பிரதேச வைத்தியசாலைக்கு எடுத்துச் சென்று அனுமதித்தநிலையில், சிறுமியை பரிசோதித்த வைத்தியர் சிறுமி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக கூறியுள்ளனர் .
இவ்வாறு உயிரிழந்தவர் ஜெகதீஸ்வரன் அட்சயா வயது 5 என அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர் .
உயிரிழந்த சிறுமியின் சடலம் அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது .
மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் .
