கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதியெனவும், சஜித் பிரேமதாச பிரதமரெனவும் ஐக்கிய தேசியக் கட்சியினர் சிலர் முன்னெடுக்கும் கோஷம் முதுகெலும்பு இல்லாத பயந்தான் கொள்ளி கதை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இது முதுகெலும்பில்லாத பெரிய பயந்தாள்கொள்ளித்தனமான கதை. கோட்டாபயவுடன் எமக்கு அரசியல் எதுவுமில்லை.
கோட்டாபய ராஜபக்சவுக்கும், மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் பிரச்சினை என இவர்கள் நினைக்கலாம். எனினும் அரசாங்கம் ஒன்றை அமைக்க எமக்கு முதுகெலும்பு பலமில்லை, வலுவில்லை என்பது இதன் அர்த்தமல்ல.
கோட்டாபயவுடன் செல்ல வேண்டியதில்லை. ஒரு முறை பொலன்னறுவையில் இருந்து ஒருவரை கொண்டு வந்து நடந்தது தெரியும் தானே.
கோட்டாபய ராஜபக்ச வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றினால் நல்லது என ஐக்கிய தேசியக் கட்சி கூறுகிறது. எனினும் அவற்றை இலங்கை நிறைவேற்ற முடியாது.
அப்படி அவர் நிறைவேற்றினால், கோட்டாபய ராஜபக்ச தொடர்ந்தும் நாட்டுடன் முன்னோக்கிச் செல்லும் சந்தர்ப்பத்தை கொடுப்போம் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

