உள்நாட்டு விமான சேவையை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கொள்கையின்படி இன்று முதல் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பமாகிறது.
சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இதனை அறிவித்துள்ளார்.
இந்த சேவை ஆரம்பிக்கப்பட்ட பின்னர் மட்டக்களப்பு, மத்தளை ஆகிய இடங்களுக்கும் விமான சேவைகள் விஸ்தரிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்துக்கும் ரத்மலானை விமான நிலையத்துக்கும்இடையில் ஆரம்பமாகும் விமானசேவையின்போது 70 ஆசனங்களைக் கொண்ட ஏ.டீ.ஆர் 72 என்ற விமானம் பயன்படுத்தப்படவுள்ளது.
இது சனிக்கிழமை, திங்கட்கிழமை மற்றும் புதன்கிழமைகளில் சேவைகளை நடத்தும். காலை 7.30க்கு ரத்மலானையில் இருந்து இந்த விமானம் புறப்படும்
அதேநேரம் காலை 8.30க்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமானநிலையத்தில் இருந்து மற்றும் ஒரு விமானம் புறப்படும். இரண்டு மணித்தியாலங்களைக்கொண்ட இந்த விமானப்பயணத்துக்கான கட்டணம் 7500 ரூபாவாகும்.
இது முன்னர் 9000 ரூபாவாக அறவிடப்பட்டது. ஆதற்கு முன்னதாக இந்த கட்டணம் 33 ஆயிரம் ரூபாவாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.