முல்லைத்தீவின், கொக்கிளாய் வில்லுக்குளம் பகுதியில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
கொக்கிளாய் பகுதியில் தங்கியிருந்து வாடியொன்றில் உதவியாளராகச் செயற்பட்டுவந்த தென்பகுதியைச் சேர்ந்த மீனவர் ஒருவரே இவ்வாறு சடலமாக எடுக்கப்பட்டுள்ளார் .
இவர், கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் காணாமல் போயிருந்த நிலையில் இன்று வில்லுக்குளத்தில் உருக்குலைந்த நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் யா-எல பகுதியைச் சேர்ந்த 63 வயதான மொகஸ்டீன் கிறிஸ்தோபர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இந்த சடலத்தைக் கண்ட சக மீனவர் கிராம அலுவலரிடம் முறையிட்ட நிலையில் கொக்கிளாய் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டு விசேட தடயவியல் பொலிஸார் மற்றும் திடீர் மரண விசாரணை அதிகாரி ரதிநாதன் முன்னிலையில் சடலம் எடுக்கப்பட்டு தோணி மூலம் கரைக்கு கொண்டுவரப்பட்டது.

