கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் இனியபாரதியின் விளக்கமறியல் மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் இன்று அக்கரைப்பற்று மேலதிக நீதவான் பி. சிவகுமார் முன்னிலையில் இன்று முன்னிலைப் படுத்தப்பட்டார்.
இதன்போது அவரை எதிர்வரும் 6ஆம்நாள் வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அம்பாறை – திருக்கோவில், அக்கரைப்பற்று ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் 2006 தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரை 7 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் தொடர்பிலேயே இனியபாரதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு,காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் ஆகிய இடங்களில் செய்யப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த விவகாரம் தொடர்பில் இனியபாரதிக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

