கடந்த அரசாங்கம் அமெரிக்காவுடன் செய்துகொள்ள முயற்சித்த எம்.சி.சி. உடன்படிக்கை தொடர்பில் ஆராய குழு ஒன்று நியமிக்கப்பட்டது தவறல்ல என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் அப்போதைய எதிர்க் கட்சியினால் இந்த உடன்படிக்கை நாட்டுக்கு ஆபத்தானது எனவும் அது கிழித்தெறியப்பட வேண்டியது எனவும் கூறப்பட்டது.
தற்பொழுது அதில், 70 வீதம் நல்லது என்றும் 30 வீதமே மோசமானது என்றும் இந்த அரசாங்கத்தினால் கருத்துத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உடன்படிக்கையை செய்வதற்கு இந்த அரசாங்கம் தயாராவதாகவும், பிழையானது எனக் கூறிய ஒப்பந்தத்தை எதற்கு ஆய்வு செய்வது எனவும் எதிர்க் கட்சியினர் தமது கருத்தை முன்வைத்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (21) சபையில் இது தொடர்பில் இவ்வொப்பந்தம் குறித்த பிரச்சினையை எதிர்க் கட்சித் தலைவர் எழுப்பினார்.
இதன்போது கருத்துத் தெரிவிக்கையிலேயே தேரர் இவ்வாறு கூறியுள்ளார்.
இருந்த போதிலும், இந்த உடன்படிக்கை தற்போதைய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளக்கூடிய பொருத்தமான உடன்படிக்கையல்ல என்றும் தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

