அமெரிக்காவுடனான எம்.சி.சி. உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் நாட்டில் இரத்த ஆறு ஓடும் என்றும் தலதா மாளிகைக்கு செல்லக்கூடிய வீதியில் அரை வாசி அமெரிக்காவுக்கு சொந்தமாகும் என்றும் கடந்த காலங்களில் கூறியவர்கள், இப்போது அதில் 70 வீதம் நல்லது என்றும் 30 வீதமே மோசமானது என்றும் கூறுவது வேடிக்கையானது என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று கேள்வி நேரத்தின்போது எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எம்.சி.சி.ஒப்பந்தம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே இதனைக் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்தம் தொடர்பாக எப்போது குழு நியமிக்கப்பட்டது? அந்தக் குழுவின் உறுப்பினர்கள் யார்? அந்தக் குழுவின் செயற்பாட்டுக் காலம் எவ்வளவு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

