ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறு பேருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்க அக்கட்சி தீர்மானித்துள்ளது.
கட்சியின் யாப்பு சட்டத்தை மீறியமை மற்றும் முரண்பாடான அறிவிப்புக்களை விடுத்தல் என்பவற்றுக்கு எதிராகவே இந்த ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.
இவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து, கடுமையான தீர்மானங்களை அறிவிக்க பின்னிற்கப் போவதில்லையெனவும் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

