எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான சகலவிதமான அதிகாரத்தையும் வழங்க ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் சிரேஸ்ட உறுப்பினர்கள் சிலரும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, அவருக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் பிரதமர் வேட்பாளராக வருவதற்கும், கூட்டணியின் தலைமைத்துவத்தை கொண்டு செல்வதற்கும் முழுமையான சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இருப்பினும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க அவர்கள் மறுப்புத் தெரிவித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

