நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று (20) முதல் மழை பெய்யக் கூடிய சாத்தியப்பாடுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பெரும்பாலான இடங்களில் பிற்பகலில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

