ஐரோப்பிய ஒன்றியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்டு வரும் ஜீ.எஸ்.பி. வரிச் சலுகை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு வரை தொடர்ந்தும் வழங்கப்படும் என அவ்வொன்றியம் உறுதியளித்துள்ளது.
கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் சுற்றுலா விமான சேவைகள் அமைச்சர் பிரசன்னா ரணதுங்க மற்றும் ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் இடையேயான சந்திப்பில் இவ்விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜி.எஸ்.பி வரிச் சலுகையானது, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு பொருட்களை ஏற்றுமதி செய்யும் அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வரிச் சலுகையாகும். இது, குறித்த சலுகையைப் பெறும் நாடுகளுக்கான ஓர் ஊக்குவிப்பாக அமைகின்றது.
இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி மற்றும் அதிக தொழில்வாய்ப்புகளை ஏற்படுத்துதல் என்வற்றின் மூலம் நிலைபேறான அபிவிருத்தியை ஏற்படுத்துவதே குறித்த சலுகையின் நோக்கம் எனவும் குறிப்பிடப்படுகின்றது.

