1000 ரூபா சம்பள உயர்வை தோட்டத்தொழிலாளர்களுக்கு வழங்குமாறு அரசாங்கம் வலியுறுத்துமாக இருந்தால் அது பெருந்தோட்டத்துறையை வீழ்ச்சியடைச் செய்யும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபா வழங்கப்படுமாக இருந்தால் தமது மாதாந்த செலவீனம் 6 மில்லியன் ரூபாவால் அதிகரிக்கும்.
அத்துடன் அது ஊழியர் சேமலாப மற்றும் நம்பிக்கை நிதியத்துக்கான பங்களிப்பு நிதியையும் அதிகரிக்கும்.
இந்த தமது நிதித்துறையை பாதிக்கும் என்று பெருந்தோட்ட நிறுவனங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
இந்த விடயம் தொடர்பாக கடந்த வெள்ளிக்கிழமை தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையிடம் விளக்கமளிக்கப்பட்டதாக பெருந்தோட்ட நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக்கூட்டத்தில் அமைச்சர் தினேஸ் குணவர்த்தன பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

