ஹுங்கம பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான நபர் ஒருவரை கைது செய்வதற்கு பொலிஸ் அதிகாரிகளினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது கையிலிருந்த துப்பாக்கி தவறுதலாக இயங்கியதனால், அருகிலுள்ள பாதையில் பயணித்துக் கொண்டிருந்த தேரர் ஒருவர் பலியாகியுள்ளார்.
ஹாதாகல பிரதேச விகாரையொன்றில் பணியாற்றிக் கொண்டிருந்த 21 வயதுடைய தேரர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

