ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான மஹிந்த அமரவீரவுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட வருமாறு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியின் அமைப்பாளர்கள் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதாக கூறப்படுகின்றது.
கொழும்பு மாவட்டத்தில் பலமான ஒரு வேட்பாளர் இல்லாமையும், ஊழல் மோசடி இல்லாதவர் என்பதனாலுமே இவருக்கு இந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரின் நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளதாக இன்றைய சகோதர வார இதழொன்று தெரிவித்துள்ளது.
இருப்பினும், அமைச்சர் மஹிந்த அமரவீர இதுவரையில் இதற்குப் பதிலளிக்க வில்லையெனவும் தெரிவிக்கப்படுகின்றது.
அமைச்சர் மஹிந்த அமரவீர, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தின் தங்காலை தொகுதியில் ஸ்ரீ ல.சு.க.யின் அமைப்பாளராக செயற்பட்டு வருபவர் எனவும் கூறப்படுகின்றது.

