ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக சஜித் பிரேமதாசவின் பெயரை முன்மொழிய முன்னெடுத்த நடவடிக்கை கட்சியின் அரசியலமைப்புக்கு முரணானது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
நேற்று (16) மாலை சிறிக்கொத்த தலைமையகத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றது. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டம் தீர்மானம் எதுவும் இன்றி நிறைவடைந்துள்ளது.
சஜித் பிரேமதாசவின் பெயர் பிரேரிக்கப்படும் போதும் அது வழிமொழியப்படும் போதும் கட்சியின் தலைவரோ, கட்சியின் முக்கிய பொறுப்புக்களில் உள்ள எவருமோ காணப்படவில்லையெனவும் கட்சியின் பொதுச் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
கூட்டத்தை முடித்துக் கொண்டு கட்சியின் தலைவர் தனது உத்தியோகபுர்வ அறைக்குச் சென்றதன் பின்னரே சஜித் பிரேமதாச பிரேரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற கூட்டம் சூடான கருத்து மோதல்கள் நிறைந்திருந்ததாகவும் கூறப்படுகுின்றது.

