யாழ்.காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக பொதுமக்களுக்கு சொந்தமான 35 ஏக்கா் உட்பட 50 ஏக்கா் நிலத்தை சுவீகாிக்க அமைச்சரவை நேற்றய தினம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
காங்கேசன்துறை துறைமுகத்தின் அபிவிருத்தி பணிகள் கடந்த ஆட்சியில் தொடங்கப்பட்டு மதிப்பீட்டு பணிகள் நிறைவடைந்தபோதும் அபிவிருத்தி பணிகள் இன்னும் நிறைவடையவில்லை.
இந்நிலையில் கடந்த 9ம் திகதி அமைச்சரவையில் மேற்படி அபவிருத்தி பணிக்கான அனுமதி கேட்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி 15 ஏக்கா் நிலம் மற்றும் மக்களுக்கு சொந்தமான 35 ஏக்கா் காணி உள்ளடங்கலாக 50 ஏக்கா் காணியை சுவீகாிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

