தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் வாழ்த்து அட்டை வெளியிட்டு பிரதமர் மோடியை டிவிட் செய்துள்ளார். தமிழர் பண்டிகையாக பொங்கல் பண்டிகை போகியோடு தொடங்குகிறது.
ஜாதி மதம் கடந்த தமிழர்கள் ஒன்றாக கொண்டாடும் பண்டிகை, பொங்கல். எல்லா மதத்தினரும் இயற்கையை போற்றி இந்த பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.
சூரியனுக்கு இந்த உணவை படைத்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.வண்ண நிறங்களில் கோலமிட்டு, வீடுகளை அலங்கரித்து மக்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இந்த நிலையில், தமிழக மக்களுக்கு பிரதமர் மோடி தமிழில் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழில் வாழ்த்து அட்டை வெளியிட்டு பிரதமர் மோடியை டிவிட் செய்துள்ளார்.
அவர் தனது டிவிட்டில் உலகம் முழுவதும் துடிப்பு மிகு தமிழ் சமூகம் பொங்கலை கொண்டாடுகிறது. அவர்களுக்கு பொங்கல் வாழ்த்து.
அதேபோல் பிரதமர் மோடி ஆங்கிலத்திலும் வாழ்த்து அட்டை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மேலும் சக்ராந்தி, மாக் பிகு உள்ளிட்ட பண்டிகைக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

