வரக்காபொல தொரவக பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்றில் யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் அவரின் தாய் படு காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று (14) அதிகாலை 5.30 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது.
குறித்த துப்பாக்கிச்சூட்டில் 22 வயதுடைய யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் படுகாயமடைந்த அவரது தாய் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த யுவதியுடன் தொடர்பை பேணி வந்த நபர் ஒருவரினால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வரக்காபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

