ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க நேற்று (13) சிங்கப்பூர் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள அவர் நாளை (15) மீண்டும் நாடு திரும்பவுள்ளதாக கூறப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவி குறித்து தீர்மானிக்க நாளை மறுதினம் வியாழக்கிழமை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமும், கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டமும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

