ரத்தொட்டை பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
தாக்குதல் தொடர்பில் ரத்தொட்டை பொலிஸ் நிலையத்திடம் முறையிடப்பட்டுள்ளதா நிலையில் இந்த நடவடிகைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ரத்தொட்டை பிரதேச சபைக்கு முன்பாக இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதனையடுத்து இந்தத் தாக்குதலை மேற்கொண்ட சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாக நிலையில் அவரை தேடும் பணிகள் முன்னெடுக்கபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

