முகநூலில் நான் எழுதிய பதிவு ஒன்றை சிலர் தங்களுக்கு இயைந்தால்போல் சாதி கதையாக மாற்றி அபகீர்த்தியை உண்டாக்கியிருப்பதாக யாழ்.மாநகரசபை உறுப்பினர் தர்ஷானந்த் கூறியுள்ளார்.
யாழ் மாநகரசபையில் அண்மையில் நடந்த தரங்கெட்ட விதமான குடுமிப்பிடி சண்டை தொடர்பாக விளக்கமளிக்கையிலேயே இதனை தெரிவித்தார்.
இன்று காலை யாழ் ஊடக மையத்தில் இதனை தெரிவித்தார்.
ஒளவையார் எழுதிய மூதுரையில் உள்ள பாடல் ஒன்றை எனது முகநூலில் எழுதியிருந்தேன் அதனை சபையில் சில உறுப்பினர்கள் தங்கள் சுயநலனுக்காக நான் சாதியை குறித்து எழுதியதாகவும் பேசியதாகவும் கூறியுள்ளனர்.
சிலர் அதனை ஒரு வேலையாகவே செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் ஒருவருடைய கல்வி அறிவை குறித்தே நான் முகநூலில் பதிவிட்டேன். தனிநபரை அல்லது சாதியை குறித்து நான் எழுதவில்லை.
மக்களும் சிலர் அதனை தவறாக புரிந்து கொண்டிருக்கின்றனர். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டு கொள்ளுகிறேன். மேலும் கட்சி என்னிடம் விளக்கம் கேட்டுள்ளது. அதனை நான் எழுத்திலும், நேரிலும் கூறுவேன். மக்களுக்கும் வெளிப்படுத்துவேன் என்றார்.

