முன்னாள் ஐ.ஜி.பி பூஜித் ஜெயசுந்தரா மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ ஆகியோர் ஜனவரி 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு தலைமை நீதவான் லங்கா ஜெயரத்னாவால் உத்தரவிடப்பட்டுள்ளது .
இரண்டு பிரதிவாதிகளும் இன்று (06) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாத குண்டுவெடிப்பைத் தடுக்கத் தவறியதன் மூலம் இருவரும் கைது செய்யப்பட்டனர், தாக்குதல்கள் குறித்து முன்னறிவிப்புகளைப் பெற்ற பின்னரும் இதுதொடர்பில் அசண்டையீனமாகா இருந்ததாக இவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .

