நாட்டின் 72 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் இடம்பெறும் ஊர்வலத்தில் கலந்துகொள்பவர்களை 30 வீதத்தினால் குறைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அத்துடன், இம்முறை தேசிய சுதந்திர தினம் நடைபெறவுள்ள கருப்பொருளுக்கு ஏற்ற கலாசார நிகழ்ச்சிகளை மாத்திரம் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துக் கொள்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
பாதுகாப்பான நாடு – வளமான தேசம் எனும் மகுட வாசகத்தின் கீழ் இம்முறை தேசிய சுதந்திர தினத்தை நடாத்துவதற்கு அமைச்சரவை உப குழு தீர்மானித்துள்ளது.

