ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவப் பிரச்சினைக்கு கூடிய விரைவில் தீர்வு காண்பதாக அக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாக்குறுதியளித்துள்ளார்.
கடந்த 02 ஆம் திகதி பாராளுமன்றத்தின் புதிய கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட முன்னர் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பி.க்கள் கூட்டத்தில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இக்கூட்டத்தில், பீல்ட் மார்சல் சரத்பொன்சேகா, ஹரீன் பெர்ணாந்து மற்றும் அஜித் பீ.பெரேரா ஆகியோர் ஐ.தே.க.யின் தலைமைத்துவம் தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதற்குப் பதிலளித்துக் கருத்துத் தெரிவிக்கும் போதே முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு கூறியுள்ளார். இந்தப் பிரச்சினையை சிறந்த முறையில் தான் தீர்த்து வைப்பதாகவும், இப்பிரச்சினை குறித்து ஊடகங்களில் கதைப்பதைத் தவிர்ந்து கொள்ளுமாறும் அவர் கட்சி எம்.பி.க்களிடம் கேட்டுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

