ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் கடந்த 03 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட சிம்மாசன உரை குறித்து எதிர்வரும் 7 ஆம் 8 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதியினால் அரை மணி நேரம் இந்த அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரை நிகழ்த்தப்பட்டது.
கடந்த 1978 ஆம் ஆண்டு முதல் இந்த நாட்டின் அரசியலமைப்பு 19 முறை திருத்தப்பட்டுள்ளது. இன்னும் இந்த யாப்பில் நாட்டுக்குப் பொருத்தமற்ற, குழப்பமும், சிக்கலும் உள்ள விடயங்கள் காணப்படுகின்றன. இதனால், தற்பொழுதும் நாட்டில் பல்வேறு பிரச்சினைகள் உருவாகியுள்ளதாகவும் ஜனாதிபதி தனது உரையில் சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

