கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் சுவசெரிய அம்பியுலன்ஸ் சேவை மூலம் 3 லட்சத்து 40 ஆயிரத்து 344 பேர் பயனடைந்துள்ளதாக அதன் நிறைவேற்று அதிகாரி சொஹான் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த சேவையை பெற்றுக்கொள்வதற்கு 1990 எனும் அவசர தொலைபேசி அழைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சேவை 24 மணி நேரமும் செயற்பாட்டில் உள்ளதாகவும், இதற்காக வேண்டி அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் 1427 பணிக்குழுவொன்று செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். இவர்கள் இந்நாட்டில் பல்வேறு அனர்த்தங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்காக ஆற்றும் சேவை பாராட்டத்தக்கது எனவும் அவர் சிலாகித்துக் கூறியுள்ளார்.

