பொதுத் தேர்தலில் கூட்டணி அமைத்து மொட்டுச் சின்னத்தில் போட்டியிட விரும்பம் இல்லாதவர்கள் தனித்து போட்டியிட முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அவ்வாறு இல்லையென்றால் ஏனைய கூட்டணிகளைப் போன்று மொட்டு சின்னத்தில் மாத்திரமே போட்டியிட முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பொதுத் தேர்தலில் கதிரை அல்லது வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு எவரினதும் பிடியில் சிக்க தான் தயாராக இல்லையெனவும் அவர் கூறியுள்ளார்.
மஹர மற்றும் வத்தளை தொகுதிகளின் உள்ளூராட்சி உறுப்பினர்களுடன் நேற்று (01) இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அமைச்சர் இதனை அறிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வெற்றிபெறச் செய்ய ஜனாதிபதித் தேர்தலில் கூட்டணி அமைக்கும் போது, பொதுத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவதாகவும் பொதுச் சின்னத்தில் கூட்டணி அமைப்பதாகவும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

