கொழும்பு, கோட்டை – காங்கேசன்துறை இடையே இயங்கும் இரண்டு ரயில்களின் சேவைகளை, டிசம்பர் 31 ஆம் திகதி முதல் நிறுத்துவதற்கு, ரயில்வேத் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, 87 மற்றும் 88 இலக்கம் கொண்ட ரயில்கள், (31) செவ்வாய்க்கிழமை முதல் இயங்கமாட்டாது. பயணிகளின் எண்ணிக்கையில் வீழ்ச்சி காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வேத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கு பதிலாக இரண்டு ரயில்கள் கொழும்பு, கோட்டை மற்றும் தலைமன்னார் இடையே இயக்கப்படும்.
ஜனவரி முதலாம் திகதி முதல் இந்த இரண்டு ரயில்களும் கோட்டை ரயில் நிலையத்திலிருந்து இரவு 7:15 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 3:25 மணிக்கு தலைமன்னாரைச் சென்றடையும்.
இந்த ரயில் தனது பயணத்தை மீண்டும் தலைமன்னாரில் இருந்து இரவு 8:25 மணிக்கு ஆரம்பித்து, காலை 4:40 மணிக்கு கொழும்பு, கோட்டையை வந்தடையும் என்றும் ரயில்வேத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

