முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுவிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதேவேளை ராஜித சேனாரத்னவுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத்தடை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தல் காலப்பகுதியில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பொன்று தொடர்பிலான விசாரணைகளில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

