விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் ராஜித் சேனாரத்ன தொடர்ந்தும், கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய தினம் குறித்த வைத்தியசாலையின் தலைமை மருத்துவர், ராஜித சேனாரத்னவின் உடல் நிலை குறித்து ஆய்வு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சர்ச்சைக்குரிய வெள்ளை வான் விவகாரம் குறித்து செய்தியாளர் சந்திப்பில் ராஜித சேனரத்னவுடன் தோன்றிய இரண்டு நபர்கள் ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தை நாடிய குற்ற விசாரணைப் பிரிவினர் ராஜித சேனாரத்னவை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவைப் பெற்றிருந்தனர்.
இந்நிலையில், திடீர் சுகயீனம் காரணமாக ராஜித சேனாரத்ன கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று கைது செய்யப்பட்டார்.
கைது செய்யபட்ட அவரை கொழும்பு மேலதிக நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, எதிர்வரும் 30ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

