ஐக்கிய தேசிய முன்னணியின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் ஜனவரி 2 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றின் புதிய அமர்வு எதிர்வரும் 3 ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறவுள்ளது.
மூன்றாம் திகதி பின்னர் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வுகளின் போது எதிர்க்கட்சி என்ற அடிப்படையில் அடுத்த கட்டச் செயற்பாடுகள் குறித்து இந்த பாராளுமன்றக் குழுக்கூட்டத்தில் ஆராயப்படவிருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

