மக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்துக்கு இடமளிக்கப் போவதில்லையென பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
இதன்படி, அரிசி, மரக்கறி, கருவாடு உட்பட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பலவற்றின் விலை ஏற்றத்தைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
கடந்த அரசாங்கம் மக்கள் மீது விதித்திருந்த வரிச் சுமைகளை நீக்கியதன் ஊடாக இந்த அரசாங்கம் மக்கள் நன்மதிப்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடந்த சில நாட்களாக விலையைக் கட்டுப்படுத்த சுற்றிவளைப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், நுகர்வோருக்கு தேவையான சகல வசதிகளையும் இந்த அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் எனவும் இன்றைய சகோதர பத்திரிகையொன்றுக்கு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

