ஆசிய நிதியத்துடன் இணைந்து கனேடிய உயர்ஸ்தானிகரகம் அண்மையில் திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளது.
பெண்களின் குரல்களும், தலைமைத்துவமும் என்ற தலைப்பில் இந்த திட்டம் இலங்கையின் பெண்களுக்கான உரிமைகளை பாதுகாக்கும் அமைப்புக்களுக்காக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆரம்ப நிகழ்வின் போது ராஜதந்திரிகள், பெண்கள் அமைப்புக்களின் பிரதிநிதிகள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட்டவர்கள் பங்கேற்றுள்ளனர்.
கனேடிய உயர்ஸ்தானிகரக அறிக்கையின் படி 27 பெண்கள் அமைப்புக்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.
இந்த திட்டத்திற்காக ஆசிய நிதியம் 3 மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

