ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் எண்ணக்கருவுக்கு அமைய இலங்கையை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வீதியோரங்களிலுள்ள வெற்று சுவர்களை ஓவியங்கள் மூலம் அழகுபடுத்தும் பணியினை இளைஞர்கள், யுவதிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
வல்வெட்டித்துறையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தட்டிவானை ஓவியமாக வரைந்துள்ளார்.சுமார் 16 மணித்தியாலங்களில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளார். பழைய நினைவுகளை மீட்கும் வகையில் அவர் வரைந்த ஓவியத்திற்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.தாயகப் பகுதியில் போர்ச்சூழல் காலப்பகுதியில் அத்தியாவசிய போக்குவரத்து சாதனமாக தட்டிவான் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

