சர்ச்சைக்குரிய விபத்துடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் சம்பிக்கவின் வாகன சாரதி திலும் துசித குமார எதிர்வரும் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் தனது சட்டத்தரணி சகிதம் நீதிமன்றத்தில் ஆஜரான போது கொழும்பு மேலதிக நீதவான் காஞ்சனா நிரஞ்சலா டி சில்வாவினால் இன்று (24) இவ்விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 26 ஆம் திகதி சந்தேக நபரிடமிருந்து சிறைச்சாலையில் வைத்து வாக்குமூலம் பெறுவதற்கு கொழும்பு குற்றப் பிரிவுக்கு அனுமதி வழங்குமாறு சிறைச்சாலைகள் திணைக்களத்திற்கு நீதவான் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு இராஜகிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்து சம்பவம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவும் சாரதியும் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும், முன்னாள் அமைச்சர் சம்பிக்க இன்று பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

