முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிரி பெர்னாண்டோ மற்றும் கட்டாய விடுமுறையில் அனுப்பிவைக்கப்பட்டுள்ள காவல் துறைமா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியுதீன் மற்றும் முன்னாள் அமைச்சர் ஆர்.ஹக்கீம் ஆகியோரிடம் சாட்சி பதிவு பெறப்படும் என சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

