சரியான விதத்தில் பயணித்தால் வெற்றி கடினமானதாக அமையாது என தான் நம்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கடவத்தையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்;துக் கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய தேசிய கட்சியின் செயற்பாடுகளை சரியான விதத்தில் முன்னெடுக்கப்பட வேண்டும்.
அவ்வாறு செயற்பட்டால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
கட்சியில் எந்த பிளவும் இல்லை.
எதிர்வரும் நாட்களில் கட்சி தலைமைத்துவம் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் தீரும் என நாடாளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

