நாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக 13 மாவட்டங்களிலுள்ள 7 ஆயிரத்து 565 குடும்பங்களை சேர்ந்த 26 ஆயிரத்து 492 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு பாதிக்கப்பட்டவர்கள் 90 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்து நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 84 வீத வரை உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
பிரதான ஆறுகளை அண்மித்து வாழும் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடரும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் ஆறு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

