ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கம் சிங்கள பௌத்த மக்களுக்காகவும், தமிழ், முஸ்லிம் மக்களுக்காகவும் சமமான பாதுகாப்பு மற்றும் அரவணைப்பை வழங்குவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மீண்டும் குண்டுவெடிப்பு போன்ற சம்பவங்கள் இலங்கையில் இடம்பெறாது. நாட்டில் வரி அறவீடுகள் பல குறைக்கப்பட்டுள்ளன. இவ்வாறான பல சலுகைகள் மக்களுக்கு இந்த அரசாங்கத்தின் கீழ் கிடைக்கப் பெற்றிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
பதுளை – வெலிமடை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.













