ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு மேற்கொள்ள இருந்த 3 நாள் பயணத்தை திடீரென ரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் கடந்த 2 நாட்களாக மக்கள் பெரும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இந்த சூழ்நிலைமையைக் கருத்தில் கொண்டே ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே இந்தியாவுக்கு இன்று மேற்கொள்ளவிருந்த மூன்று நாள் விஜயத்தை ரத்து செய்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.
அசாம் போராட்டம் காரணமாக ஏற்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை கருதியே அவருடைய இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

