ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் உருவாகும் புதிய அரசாங்கத்தில், தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் பொறுப்பை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நிறைவேற்ற வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கான தொகுதி அமைப்பாளர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் முன்னாள் ஜனாதிபதி இதனைக் கூறியுள்ளார்.
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களின் நம்பிக்கையை வென்றெடுத்து, தமிழ், முஸ்லிம் மக்களின் வாக்குகளை அரசாங்கத்துக்கு கிடைக்கச் செய்வதற்குமான செயற்பாடுகளை முன்னெடுக்கும் பொறுப்பு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களுக்கு உள்ளது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

