ஜப்பானிய வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் மொதேகி டொசிமிட்சு தலைமையிலான குழுவினர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.
இச்சந்திப்பு நேற்று (13) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் இலங்கை வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் MOTEGI Toshimitsu மற்றும் துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர் ஜோன்ஸ்டன் பர்ணாந்து ஆகியோர் நேற்றுமுன்தினம் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, ஜப்பான் அமைச்சர், துறைமுக கட்டுப்பாட்டு கோபுரத்தை பார்வையிட்டுள்ளார். இவ்விஜயத்தில் துறைமுக அதிகார சபையின் முகாமைத்துவ பணிப்பாளர் கெப்டன் அத்துல ஹேவாவித்தாரன மற்றும் சபையின் உயர் அதிகாரிகளும் கலந்துக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

