அவசரமாக கட்சியின் செயற்குழு கூட்டத்தை கூட்டுமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
26 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இது தொடர்பான கோரிக்கையை கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
இந்த அவசரக்கூட்டம் எதிர்வரும் 20ம் திகதிக்கு முன்னர் கூட்டப்படவேண்டும் என்று அவர்கள் கேட்டுள்ளனர்.
கட்சியின் தலைவராக இருக்கக்கூடியவரே அடுத்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நிலைக்கு போட்டியிட முடியும் என்ற நிலைப்பாட்டில் உள்ளவர்களே இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுப்பியுள்ளனர்.
இதேவேளை ரணில் விக்ரமசிங்கவே பிரதமர் நிலைக்கு போட்டியிடவேண்டும் என்று மற்றும் ஒரு குழுவும் கோரிக்கை விடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

