ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வெற்றிக்கு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பாரிய சக்தியாக இருந்ததாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், எமது ஆதரவு கிடைக்காவிட்டால் கோட்டாபய ராஜபக்ச இலகுவாக வெற்றிபெற்றிருக்க மாட்டார் எனவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மாற்று வேட்பாளருக்கு அதரவு தெரிவித்திருந்தால் கோட்டாபய ராஜபக்ச சுமார் எட்டு லட்சம் வாக்குகளை இழந்திருப்பார்.
தேர்தல் வெற்றிக்காக தங்கள் கட்சி வேறு எந்த கட்சிக்கும் “கடன்பட்டிருக்கவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பல உறுப்பினர்கள் தெரிவித்து வந்த நிலையில், அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
எவ்வாறாயினும், கோட்டாபய ராஜபக்சவின் வெற்றியின் பின்னணியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு முக்கிய காரணியாக இருந்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.

